Show all

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் முறையில் மாற்றம்.

தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.

மாணவர்களின் உயர்க் கல்விக்குப் பயன்பெரும் வகையில் வழங்கப்பட்டு வரும் இந்த விலையில்லா மடிகணினி, வழங்கும் முறையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது, மாணவ, மாணவிகள் பிளஸ் 2, முடித்து உயர் கல்வியில் சேர்ந்த பிறகே, அவர்களுக்கு மடிகணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அவர்கள் பிளஸ் 2 படிக்கும்போதே விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும், என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதன் பேரில்,

இந்த ஆண்டு முதல், மாணவ மாணவியர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும்போதே, விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில், 2015-2016 கல்வி ஆண்டுக்கு உரிய 5 லட்சத்து 8 ஆயிரத்து 72 மடிக்கணினிகள் கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

இந்த ஆண்டு மடிக்கணினிகள் அனைத்தும் வந்துவிட்டன. எனவே உடனே கொடுக்கும் பணியை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் செய்ய உள்ளனர். எனவே மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டே பயன்படும். அவர்கள் உயர்கல்வியில் படிக்கும்போதும் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.