Show all

அரசியல் விமர்சகர்ளால் பரபரப்பாக பேசப்படும் அனந்திபென் படேல் ராஜினாமா

குஜராத் முதல் மந்திரியாக பதவி வகித்து வந்த நரேந்திர மோடி, கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதையடுத்து, குஜராத் மாநிலத்துக்கு புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், குஜராத் முதல் மந்திரி பொறுப்பில் இருந்து விலக விரும்புவதாக ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது முகநூல் பக்கத்தில் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், அண்மைக்காலமாக 75அகவை நிறைவு எய்தியவர்கள் பதவியில் இருந்து தானாக முன்வந்து விலகும் மரபு பாரதீய ஜனதாவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் மாதம் 75வது பிறந்தநாள் கொண்டாடவுள்ளேன். அதனையொட்டி முதல்வர் பொறுப்பில் இருந்து விடுவித்து கொள்ள விரும்புகிறேன். இரு மாதங்களுக்கு முன்பு என்னை விடுவிக்குமாறு கட்சிக்கு நான் கடிதம் எழுதினேன். துடிப்பான குஜராத், சட்டமன்ற தேர்தல் போன்றவை நடைபெறவுள்ளதால் புதிய முதல்வர் பணியாற்றுவதற்கு உரிய கால அவகாசம் வேண்டும் என்பதால் இரு மாதங்களுக்கு முன்பே என்னை விடுவிக்குமாறு கட்சிக்கு நான் கடிதம் எழுதினேன் என்று தெரிவித்துள்ளார். வரும் 2017 ல் குஜராத் சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில கிழமைகளாக குஜராத்தில் தலித்களுக்கு எதிராக வன்முறை நீடிப்பதாக தேசிய அளவில் சர்ச்சை எழுந்தது. இதனால், அனந்திபென் படேல் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்ளால் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கிடையே பஞ்சாப் மாநில ஆளுநராக அனந்திபென் படேல் நியமிக்கப்படவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.