Show all

புதுச்சேரியில் சட்டப்பேரவைக்கூட்டம் 9 நிமிடத்தில் நிறைவடைந்து.

புதுச்சேரியில் இன்று (வௌ;ளிக்கிழமை) சட்டப்பேரவைக்கூட்டம் 9 நிமிடத்தில் நிறைவடைந்து. கூட்டத்தைக் காலவரையின்றி சபாநாயகர் ஒத்தி வைத்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் இன்று சபாநாயகர் சபாபதி தலைமையில் நடைபெற்றது. ராஜ்யசபா தேர்தலில் அதிமுகவுக்கு ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளித்திருந்தது. இந்நிலையில் கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம், முன்னாள் அமைச்சர் தட்சிணாமூர்த்தி, ஹஜ் யாத்ரீகர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை நகலை அமைச்சர் தியாகராஜன் வாசிக்க தொடங்கினார்.

இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் புருஷோத்தமன், அன்பழகன் ஆகியோர் குறுக்கிட்டு,  இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைகோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். அதை பின்பற்றி புதுச்சேரியில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். இது எதிர்ப்பானது அல்ல. தமிழர்களுக்கானது என்றனர்.

இதற்கிடையே அரசு கொறடா பதவியை ராஜிநாமா செய்து கடிதம் தந்த ஆளுங்கட்சி எம்எல்ஏ நேரு, சட்டப்பேரவையைப் பத்து நாட்கள் நடத்த கடிதம் தந்தேன். அதற்கு பதில் தேவை என்று தொடர்ந்து பேசினார்.

அதற்கு சபாநாயகர் சபாபதி,  கடிதத்தை எங்கு தந்தீர்களோ அங்கு பதில் தருகிறேன். பேரவையைக் கூட்டுவதை முடிவு எடுக்க குழு இருக்கிறது. உங்கள் கோபத்தை இங்கு காட்டாதீர்கள் என்றார்.

அப்போது அமைச்சர் தியாகராஜன் அறிவிக்கை நகலை படித்து முடித்தார். இதையடுத்து பேரவையைக் காலவரையன்றி சபாநாயகர் ஒத்தி வைத்தார். சட்டப்பேரவை கூட்டம் 9 நிமிடங்களில் நிறைவடைந்தது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.