Show all

ஏர்டெல்லின் அழகான போங்காட்டம்! புதிய ரூ.398 கட்டணஏற்றத் திட்டம்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே வழங்கி வந்த ரூ.399 கட்டண ஏற்றத்  திட்டத்தை போல தற்போது ரூ.398 கட்டண ஏற்றத் திட்டத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. 

உண்மையில் இது சலுகையா? சலுகை பறிப்பா என்பதை ஆராய்ந்து பார்த்தால், சலுகை பறிப்பு முயற்சியே என்பது புலனாகிறது.

அந்த வகையில் தற்போது ரூ.398 கட்டண ஏற்றத் திட்டத்தில், அன்றாடம் 1.5 ஜிபி தரவு, ஒட்டு மொத்தமாக 105 ஜிபி தரவு, 70 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இலவச அழைப்பு சேதி சேவை எல்லாம் எழுபது நாட்களுக்கே. ஆனால், இந்த சலுகையை பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது. ஏனெனில், நடப்பில் வழங்கப் பட்டு வருகிற ரூ.399 திட்டத்தில், அன்றாடம் 1 ஜிபி தரவு என்றாலும் இலவச அழைப்பு சேதி சேவைகளோ 84 நாட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இப்போது 1 ரூபாயை குறைத்துவிட்டு என்னத்தான் தினமும் 0.5 ஜிபி கூடுதல் தரவு கிடைத்தலும் செல்லுபடி காலம்; 70 நாட்களாக உள்ளது. இதனால், இந்த புதிய கட்டண ஏற்றத் திட்டத்தால் வாடிக்கையாளர்களுக்கு பெரிதாக எந்த பயனும் இல்லை என தெரிகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,091.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.