Show all

கெத்து காட்டும் ஏர்டெல் மற்றும் வோடா! இதுவரை கெத்து காட்டி வந்த ஜியோவைக் கடந்து

ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து வேறு தொலைத் தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்களுடன் பேசும் அழைப்புகளுக்கு கட்டணத்தை ரத்து செய்துள்ளது. ஜியோ கட்டணம் விதிக்கிறது.

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அழைப்பு மற்றும் இணைய பயன்பாட்டுக்கான பலவகைகளின் கட்டணங்களை 42 விழுக்காடு வரை உயர்த்தின. வேறு தொலைத்தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்களுடன் பேசும் போது, அதிகபட்சமாக 3 ஆயிரம் நிமிடங்கள் வரைதான் பேச முடியும் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடங்கி வைத்தது ஜியோதான். வேறு தொலைத் தொடர்பு நிறுவன வாடிக்கையாளர் அழைப்புகளுக்கு பணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. இதற்கான திட்டங்களை ஜியோ கடந்த மாதம் அறிவித்தது.

ஆனால் திடீர் திருப்பமாக, தற்போது ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் இருந்து வேறு தொலைத் தொடர்பு நிறுவன வாடிக்கையாளர்களுடன் பேசும் அழைப்புகளுக்கு கட்டணத்தை ரத்து செய்துள்ளது. இந்த வகைக்கு ஜியோவில் கட்டணம் உண்டு. ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தனியாக ஏதும் கட்டணம் வாங்காது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,361.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.