Show all

தமிழக அரசின், 6,800 மதுக்கடைகளுக்கு மிலாது நபியை முன்னிட்டு விடுமுறை

மிலாது நபியை முன்னிட்டு, டாஸ்மாக்குகளுக்கு, டிசம்பர் 24ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்திற்கு, 6,800 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், நாளொன்றுக்கு சராசரியாக, 70 கோடி ரூபாய்க்கு, பீர் மற்றும் மது வகைகள் விற்பனையாகின்றன டிசம்பர் 24ம் தேதி, மிலாதுன் நபி திருநாளை முன்னிட்டு, டாஸ்மாக்குகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று, பார், ஓட்டல், கிளப்புகளிலும், மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.