Show all

நடிகர் சஞ்சய்தத் உள்ளே-வெளியே, உள்ளே-வெளியே.

நடிகர் சஞ்சய்தத் சிறைத் தண்டனையை ரத்துசெய்யக் கோரிய மனுவை மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் தள்ளுபடி செய்தார்.

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சட்டவிரோதமாக எந்திர துப்பாக்கி வைத்திருந்த குற்றத்திற்காக நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் 2013-ம் ஆண்டு மே மாதம் முதல் 2014-ம் ஆண்டு மே மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 118 நாட்கள் பரோல் மற்றும் பர்லோவில் (சிறை விடுப்பு) அவர் வெளியே இருந்தார்.

நடிகர் சஞ்சய் தத் அடிக்கடி பரோல் மற்றும் சிறை விடுப்பில் வெளியே வருவது சர்ச்சையைக் கிளப்பியது. இதை தொடர்ந்து சஞ்சய் தத் பர்லோவில் விடுவிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்ட சம்பவமும் நடந்தது. கடந்த வருடம் டிசம்பர் மாதமும் புதுவருடம் கொண்டாட செல்வதாக கூறி பரோலில் சென்றுவிட்டார். தற்போது, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 30 நாட்கள் பரோலில் வெளியே வந்து உள்ளார்.

மராட்டிய மாநில கவர்னரிடம், சஞ்சய்தத்திற்கு மன்னிப்பு வழங்கி, சிறைத் தண்டனையை ரத்துசெய்யக்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. சிறைத் தண்டனையை ரத்து செய்யக்கோரிய மனுவை மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ் தள்ளுபடி செய்து உள்ளார். கடந்த 2013ம் ஆண்டு முன்னாள் உச்சநநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ சஞ்சய் தத்திற்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்று மராட்டிய மாநில கவர்னருக்கு கடிதம் எழுதி இருந்தார். தற்போது மன்னிப்பு வழங்க தேவையில்லை என்று சிறைத் தண்டனையை ரத்துசெய்யக்கோரி மனுவை கவர்னர் வித்யாசாகர் ராவ் தள்ளுபடி செய்து உள்ளார்.

கடந்த 2007-ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 18 மாதங்கள் சிறையில் இருந்தார். இதனையடுத்து வழக்கை எதிர்க்கொள்ள ஜாமீனில் வெளியேவந்தார். கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சிறைக்கு சென்றார்.  

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.