Show all

தமிழக அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் வீரராக எல்.பாலாஜி

இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் சீசன் அடுத்த மாதம் (அக்டோபர்) 1–ந் தேதி தொடங்கி பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் தமிழக அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தமிழக அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பரோடாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அக்டோபர் 1–ந் தேதி முதல் 4–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் எல்.பாலாஜி பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் வீரராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அணி வீரர்கள் வருமாறு:–

அபினவ் முகுந்த் (கேப்டன்), பாபா இந்த்ராஜித் (துணை கேப்டன்), மலோலான் ரங்கராஜன், பாபா அபராஜித், ராஹில் ஷா, பாரத் சங்கர், சந்திரசேகர், அஸ்வின் கிறிஸ்ட், விஜய் சங்கர், விக்னேஷ், பிரசன்னா, முகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கவுசிக். மானேஜர்: ஆர்.ஐ.பழனி, பயிற்சியாளர்: சஞ்சய், பந்து வீச்சு பயிற்சியாளர்: எல்.பாலாஜி.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.