Show all

தேடித்தான் போகவேண்டும், போராடிதாம் பெறமுடியும்; இந்தியாவின் சட்ட அமைப்பே அப்படித்தான்! உலகறிந்த பந்தாட்ட வீரங்கனைக்கு வாக்குரிமை இல்லை.

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் நடைமுறையில் இருக்கிற சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலேயர் நம்மை ஆளும் போது போடப்பட்ட சட்டங்கள். ஆளுகிற இனம் வேறு ஆளப்படுகிற இனம் வேறு. ஆங்கிலேயர் ஆளப்படுகிற இனத்திற்கு சில பல சலுகைகள் தர விரும்பினார்கள். ஆதை சட்டமாகவும் ஆக்கினார்கள். 

ஒட்டுமொத்த இந்தியாவிலும், ஆரியர் நுழைந்து கலந்த காலத்தில் இருந்து இருவகையான ஏற்றதாழ்வுகள் படிப்படியாக வளர்ந்தன. ஒன்று பொருளாதார ஏற்றதாழ்வு. இரண்டாவது சமூக ஏற்றதாழ்வு. 

இந்த இருவகை ஏற்றதாழ்வு சாக்கடை நாற்றத்தை சீர் செய்யும் முயற்சியில்தான் வணிகராக வந்த வெள்ளையர்கள் ஆட்சியாளர்களாக மாறினார்கள். 

ஆங்கிலேயர்கள், ஒட்டு மொத்த இந்தியாவில் இருக்கிற சமூக, பொருளாதார ஏற்றதாழ்வுகளை முழுமையாகப் பட்டியல் இடவில்லை ; பட்டியல் இடவும் முடியாது ;பட்டியலிடவும் தேவையும் இல்லை என்பதே உண்மை. 

ஆனால் தேடலுக்கும் போராட்டத்திற்கும் மதிப்பளித்தார்கள். உண்மையென்று பட்டால் சலுகை செய்தார்கள். ஆனால் விடுதலை பெற்று எழுபத்தியோரு ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் அதே வகையான சட்ட அமைப்;பை மாற்றிக் கொள்ளவில்லை. தற்போதும,  நமது உரிமையான எந்த ஒன்றுக்கும் தேடித்தான் போகவேண்டும், போராடிதாம் பெறமுடியும்.

ஆனால் வெள்ளையர் காலத்தில், வீட்டிலிருந்தபடியே எழுதி எழுதியே ஆவணப் போராட்டம் நடத்தியே நமது உரிமையை வென்றெடுக்க முடியும். ஆனால் தற்போது இலஞ்சம் என்று ஒன்று சேர்ந்து விட்டது. அதிகாரிகள் நமது உரிமையை இலஞ்சம் கொடுத்தால்தான் மீட்டுக் கொடுப்பார்கள்.

ஆதார் ஆதார் என்று அரசு நிர்பந்திக்கிற அட்டையைக் கூட நமது வீட்டிற்கே வந்து கொடுக்க அரசிற்கு வக்கில்லை. ஒட்டு மொத்த இந்தியாவை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற சமூக, பொருளாதார ஏற்றதாழ்வுக்கு இந்தியாவில் கணக்குப் பட்டியல் இல்லை. 

சாதிச் சான்றிதழும் நாம்தான் தேடிப்போய், அலைந்து திரிந்து, பக்கத்து வீடு, அடுத்த வீட்டார் கையொப்பங்;களைப் பெற்று ஆதாரங்களைக் காட்டி வாங்கியாக வேண்டும். 

வாக்காளர் அடையாள அட்டையும் நாம்தான், வாக்காளர் பட்டியலில் நம்முடைய பெயர் இருக்கிறதா என்று தெரிந்து கொண்டு, ஏதாவதொரு சான்றை அடையாளப் படுத்தி அதற்கான அரசு அதிகாரிகளிடம் சென்று வாங்கி வர வேண்டும். 

ஒருமுறை ஒரு முகவரியில் இருந்து நாம் வாக்களித்து விட்டால் அடுத்த முறையம் நமது பெயர் அந்த முகவரியல் இருக்கும் நம்பிக் கொண்டிருந்தால் உத்தரவாதம் இல்லை. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முந்தி வாக்காளர் பட்டியலில் நம் பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்து, தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் நமது பெயரை இடம் பெறச் செய்து விட வேண்டும். 

சில நேரங்களில் நாம் அந்தக் கட்;சிக்குதான் வாக்களிப்போம் என்று உறுதியாகத் தெரிந்தால், அந்த கட்சி நிருவாகிகள் இந்த வேலையை நமக்கு செய்து அந்தக் கட்சி வெற்றி பெற்று அவர்கள் ஆதாயம் பார்க்கலாம் அல்லவா அதற்காக.

சர்கார் படத்தில் ஒரு காட்சி வரும். உலகின் மிகப் பெரிய பிரபலமான விஜய் ஓட்டுப் போட சொந்த ஊருக்கு வருவார். வந்த இடத்தில் அவரது ஓட்டை கள்ளஓட்டுப் போட்டு விடுவார்கள். அடடா வடை போச்சே என்று புலம்பிக் கொண்டு திரும்பாமல் சட்ட ரீதியாக போராடுவார் விஜய். தன்னை எதிர்க்கும் அரசியல்வாதிகளையும் பந்தாடுவார். மக்களையும் தட்டி எழுப்பி சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவார். 

நேற்றும் கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு சம்பவத்தை ஹைதராபாத்தில் மக்கள் காண நேரிட்டது. பிரபல சிறகுப் பந்தாட்ட வீரர் ஜூவாலா கட்டா. இவருக்கு ஹைதராபாத்தில் ஓட்டு உள்ளது. நேற்று நடந்த கடைசிக் கட்ட தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற இவருக்கு வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை என்ற தகவலை வாக்குச் சாவடி அதிகாரிகள் கூறவே அதிர்ந்து போனார். எங்கே போச்சு பெயர்கள் கட்டா மட்டுமல்ல, அவரது தந்தை, சகோதரி ஆகியோரின் வாக்குகளும் கூட இல்லை,. இதனால் குடும்பமே அதிர்ந்து போனது. பெரும் ஏமாற்றத்துடன் வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினார் ஜூவாலா கட்டா. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தனக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமை குறித்து கீச்சு மூலம் பகிர்ந்து வேதனை மற்றும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் ஜுவாலா. என் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை. இந்த தேர்தல் எப்படி நியாயமாக நடந்திருக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் புலம்பியுள்ளார். ஜுவாலா கட்டா ஊராறிந்த புள்ளியாக இருக்கிற காரணத்தால், அவரது கீச்சுவிற்கு தெலுங்கானா மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ரஜத் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் இந்த முறை ஜுவாலாவின் பெயர் இடம் பெறவில்லை. அதை சேர்த்திருக்க வேண்டும். தவறி விட்டது. மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுப்போம். ஜுவாலாவுக்காக அனுதாபப்படுகிறேன் என்றார் ரஜத் குமார். அவ்வளவுதான் நிஜத்தில் இதுதான் நடக்கும். தலைமைத் தேர்தல் அதிகாரி, மிஞ்சிப் போனால் தேர்தல் ஆணையம் வருத்தம் தெரிவிக்கும். அதற்கு மேல் எதுவும் நடக்காது. நாமும் புலம்பலுடன் கீச்சு அல்லது முகநுலில் பதிவு போட முடியும். அதற்கு மேல் நிவாரணம் எதுவும் நடக்காது, நடக்கவும் வாய்ப்பில்லை. ஆங்கிலேயர் வடிவமைத்துக் கொடுத்த சட்ட அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டிருக்கும் வரை. 

இந்திய மக்களாட்சி நாட்டில், முழுமையான சமூக, பொருளாதாரக் கணக்கெடுப்பு வேண்டும். சமூகரீதியாக தாழ்த்தப் பட்டிருப்போரை, பொருளாதார ரீதியாகத் தாழ்ந்திருப்போரை அரசே மீட்டெடுக்க வேண்டும். அப்போது அதிகாரிகள் வேலை செய்தே ஆக வேண்டும். இலஞ்சம் முழுமையாக ஒழியும். இந்த வேலைத்திட்டத்திற்கான கட்சிகள் இந்தியாவில் எதுவும் இல்லை. குறைந்த பட்சம் தேசியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்கிற கட்சிகளான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை அப்புறப் படுத்தி விட்டு, அந்தந்த மாநிலக் கட்சிகளை மட்டும் மக்கள் அங்கிகரித்தால் இந்த வேலைத்திட்டத்திற்கான வாய்ப்பு ஏற்படும். பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் இருக்கும் வரை இந்தியாவில் சமூக, பொருளாதார ஏற்றதாழ்வுகள் படிப்படியாக வளருமேயன்றி குறைபடாது. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,996.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.