Show all

மௌலியின் கதை, திரைக்கதையில் உருவாகும் நகைச்சுவைப் படத்தில் கமல்.

கமலும் இயக்குநர் மற்றும் நடிகருமான மௌலியும் மீண்டும் இணைகிறார்கள். மௌலியின் கதை, திரைக்கதையில் உருவாகும் நகைச்சுவைப் படத்தில் கமல் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் படத்தை தூங்காவனம் இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா இயக்க உள்ளார்.

சிலவாரங்களுக்கு முன்பு கமல் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கிய தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இதனையடுத்து இதே படக்குழு மீண்டும் இணைய உள்ளது.

‘சமீபத்தில், கமலைச் சந்தித்துப் பேசினார் மௌலி. அவர் சொன்ன கதை கமலுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இந்தக் கதையை ராஜேஷ் இயக்கினால் சரியாக இருக்கும் என்று கமல் எண்ணினார். இது ஒரு நகைச்சுவைப் படம்’ என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். உத்தம வில்லன் படத்தினால் லிங்குசாமிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதைச் சரிகட்ட இந்தப் படத்தை லிங்குசாமியே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல் - மௌலி கூட்டணியில் சில வருடங்களுக்கு முன்பு பம்மல் கே சம்பந்தம் வெளிவந்தது. மௌலி இயக்கிய நளதமயந்தியை கமல் தயாரித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.