Show all

18 வயது வாலிபன், ஐ.நாவால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில்!

பிரிட்டனைச் சேர்ந்த, அசீல் முதானா என்ற 18 வயது வாலிபன், ஐ.நாவால் அதிகம் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளான்.

இங்கிலாந்தில் வசித்த இந்த வாலிபன், 2014-ம் ஆண்டு, சிரியா சென்று, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறான். அவ்வப்போது ஊடகங்களிலும் தலைகாட்டும் அசீல் முதானா, இங்கிலாந்தில் தாக்குதல் நடத்த சதித் திட்டங்கள் தீட்டியிருப்பதும் அண்மையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அசீல் முதானா உட்பட பிரிட்டனைச் சேர்ந்த 5 பேரை, தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க, ஐ.நா விடம், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விண்ணப்பித்துள்ளார்.

இதனால், அசீல் முதானா உட்பட ஐந்து பயங்கரவாதிகள் மீதும் பயணத்தடை விதிக்கப்பட்டு, அவர்களின் சொத்துகள் முடக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.