Show all

வாடிக்கையாளர்களைக் கட்டண உயர்வுக்கு மாற்றி கூடுதல் இலாபம் பெற ஏர்டெல்லின் ஒரு யுக்தி! புதிய கட்டண விகிதம் அறிமுகம்

23,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஏர்டெல் புதிய கட்டண விகிதம் ஒன்றை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களைக் கட்டண உயர்வுக்கு மாற்றி கூடுதல் இலாபம் ஈட்ட தில்லாலங்கடியில் ஈடுபட்டிருக்கிறது.  

இந்தப் புதிய கட்டண விகிதத்தில். ரூ.289 க்கு அன்றாடம் ஒரு ஜிபி தரவும், வழக்கம் போல இலவச அழைப்பு, இலவச சேதிகள் 48 நாட்களுக்கு அளிக்குமாம்.

நடப்பு நிலையில் ரூ.399க்கு அன்றாடம் 1.4 ஜிபி தரவும் வழக்கம் போல இலவச அழைப்பு, இலவச சேதிகள் 84 நாட்களுக்கு அளிக்கப் பட்டு வருகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்றாடச் செலவு ரூ4.75 ல் அன்;றாடம் 1.4ஜிபி தரவு கிடைக்கிறது.

இந்த புதிய அறிமுக கட்டண விகிதத்தில் அன்றாடம் ரூ.6.02க்கு அன்றாடம் 1ஜிபி தரவு கிடைக்கும். அசுக்கு புசுக்கு ஆச தோச அப்பளம் வட. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அப்படியெல்லாம் ஏமாந்து போய் கட்டண உயர்வில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,996.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.