Show all

ரூ.250 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கி போய் கிடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சுங்க வரியைக் குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று (திங்கட்கிழமை) 5-வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. லாரிகள் ஓடாததால் ஆங்காங்கே லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு உள்ளன.

வேலை இல்லாமல் லாரி டிரைவர்களும், கிளீனர்களும் லாரிகளிலேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்டு வருகிறார்கள்.

ஈரோடு, சித்தோடு, நரிப்பள்ளம் உள்பட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. வெளியூர் மற்றும் வெளிமாநில லாரி டிரைவர்கள் பொழுதுபோக கூட வழியின்றி தவித்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து தினமும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு லாரிகளில் ஜவுளி மூட்டைகள் செல்லும். ஆனால், தற்போது நடந்து வரும்; ‘வேலைநிறுத்தம்’ காரணமாக லாரிகள் ஓடாததால் அனைத்தும் ‘புக்கிங்’ ஆபிஸ் மற்றும் குடோன்களில் மலைபோல் குவிந்து கிடக்கிறது.

தினமும் இப்படி 50 கோடி ரூபாய் மதிப்புள்ள மஞ்சள், துணிகள் தேக்கமாகி இன்றுவரை ரூ.250 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேங்கி போய் கிடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.