Show all

காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி! சின்ன சேலத்தில் பொதுமக்கள் பாராட்டு

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள், பெண்கள், பொதுமக்களிடையே காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சின்னசேலம் ஆய்வாளர் சண்முகம் தலைமை தாங்கினார். துணை ஆய்வாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான காவல் துறையினர் கலந்து கொண்டு காவலன் செயலி பயன்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

அப்போது நடந்த நிகழ்ச்சியில் சின்னசேலம் ஆய்வாளர் சண்முகம் பேசும்போது 'தனியே வீட்டில் இருக்கும் பெண்கள், தனியே செல்லும் மாணவிகளுக்கு சமூக விரோதிகளால் பாலியல் தொல்லை அச்சுறுத்தல்கள் ஏற்படலாம். அதைப்போல வயதான முதியவர்கள் இருக்கும் வீடுகளிலும் குறி வைத்து திருட்டு சம்பவங்கள் நடக்கலாம்.

இத்தகைய திருட்டு, தனிநபர் தாக்குதல் சம்பவங்களை தடுத்திட ஆன்ராய்டு செல்பேசி வைத்துள்ள நபர்கள் அனைவரும் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தச் செயலியை பயன்படுத்தி ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதாவது காவலன் செயலியில் உள்ள ளழள என்ற பட்டனை அழுத்தினால் உடனடியாக காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து உங்களுக்கு உதவி செய்யும். ஆகையால் செல்பேசி உள்ள அனைவரும் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளும்படி அறிவுரை வழங்கினார். சின்னசேலம் பேருந்து நிலையத்தில் நடந்த காவலன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோர் காவல்துறையின் இந்த முயற்சியைப் பாராட்டினர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.