Show all

பாஜக முதல்வர் ஆதித்தியாநாத்தின் வரலாறு கண்டிராத அரசாணை! உத்தரபிரதேசத்தில் 3 மாதங்களுக்கு திருமணங்கள் நடத்தத் தடை

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக முதல்வர் ஆதித்தியாநாத் ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், எதிர்வரும் ஆங்கில ஆண்டு சனவரி முதல் மார்ச் வரையில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் வரும் சனவரி முதல் மார்ச் வரை, புத்த பூர்ணிமா, கும்பமேளா, மகா சிவராத்திய உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் உத்தர பிரதேசத்தில் குவிவது வழக்கம். மக்கள் அதிகளவில் வருவதால், அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு எதிர்வரும் ஆங்கில ஆண்டு சனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களுக்கு, திருமணங்கள் நடத்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார்.

இதுகுறித்த அரசு உத்தரவு உத்தர பிரதேசம் முழுவதும் உள்ள திருமண மண்டபங்கள், உணவகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாதத்தில் முன்பதிவு செய்திருந்தாலும் அதனை உடனடியாக ரத்து செய்யும்படி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேய்கள் ஆட்சி செய்யும் நாட்டில் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்ற பழமொழிக்கு பொருள் விளங்கச் செய்கிறார் என்று பேசிக் கொள்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள். இவரைப் போய் ஆட்சியில் அமர்த்திய உபி மக்கள்?

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,989.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.