Show all

டெல்லியில் மாநகராட்சி ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை

டெல்லி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் சம்பளம் வழங்கக்கோரி வேலை நிறுத்த போராட்டம் நடத்துகின்றனர். இதனால் நகரில் குவியும் குப்பைகளை, ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அகற்றி வருகின்றனர்.

 

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மாநகராட்சி ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

எனவே சம்பளம் வழங்கக்கோரி 60 ஆயிரம் துப்புரவு தொழிலாளர்கள், 12 ஆயிரம் தொழில்நுட்ப ஊழியர்கள், 7 ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் 12 ஆயிரம் நர்சுகள் ஆகியோர் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தால் அங்கு குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் சாலைகள், தெருக்கள் எங்கும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. துர்நாற்றமும் பரவத் தொடங்கி உள்ளது.

 

இதனைச் சமாளிப்பதற்காக பொதுப்பணித்துறை ஊழியர்கள், நகரில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றத் தொடங்கி உள்ளனர். பெங்கள+ருவில் இயற்கை மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள மற்றும் தொண்டர்களுக்கு ‘கீச்சு+’ மூலம் தகவல் அனுப்பி உள்ளார். பொதுப்பணித்துறையுடன் ஒத்துழைப்பு கொடுத்து குப்பைகளை அகற்ற அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

இதனை ஏற்றுக்கொண்டு ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று டெல்லி நகரில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றினர்.

 

துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுற்றுலாத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா, பொதுப்பணித்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மற்றும் சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல் ஆகியோரும் தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.