Show all

திருநங்கையரால் நடத்தப்படும், ஜிடாக்சி சேவையைத் தொடங்க, கேரள அரசு திட்டமிட்டுள்ளது

நாட்டிலேயே முதல் முறையாக, திருநங்கையரால் நடத்தப்படும், ஜிடாக்சி சேவையைத் தொடங்க, கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

கேரளாவில், பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படும், ஷிடாக்சி சேவைக்கு, மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. அதைப் பின்பற்றி, திருநங்கையரை, சமூக நீரோட்டத்தில் இணைக்கும் திட்டமாக, ஜிடாக்சி எனப்படும், வாடகைக் கார் சேவையைத் தொடங்க, திட்டமிடப்பட்டுள்ளது. கேரள அரசின் சமூக நீதித்துறை உருவாக்கிய இந்தத் திட்டத்தின்படி, கார்களின் உரிமையாளராகவும், கார்களை இயக்குபவராகவும் திருநங்கையர் இருப்பர். வரும், மார்ச் மாதம் முதல், ஜிடாக்சி சேவை துவங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

 

இதுகுறித்து, மாநில சமூக நீதித்துறை அமைச்சர் முனீர் கூறுகையில், கடந்த நவம்பரில், திருநங்கையர் தொடர்பான கேரள அரசின் கொள்கைத் திட்டம் வெளியிடப்பட்டது. அதன் ஒரு அங்கமாக, ஜிடாக்சி செயல்படுத்தப்படுகிறது, என்றார்.

 

     கேரள அரசின் முந்தைய திட்டமான ஷிடாக்சி, பெண்களால், பெண்களுக்காக இயக்கப்பட்டது

     திருநங்கையரைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்த, தற்போது ; தெடங்கப்படும் ஜிடாக்சியில், பாலின பாகுபாடின்றி யாரும் பயணிக்கலாம். எனவே இது, சமத்துவ டாக்சி திட்டமாக, கருதப்படுகிறது

     ஷிடாக்சி திட்டத்தைச் செயல்படுத்திய, ஜெண்டர் பார்க் நிறுவனத்திடம், ஜிடாக்சி திட்ட பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது

     ஜிடாக்சியில், ஜி.பி.எஸ்., உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருக்கும்

     கேரளாவில், 25 ஆயிரம் திருநங்கையர் உள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.