Show all

இராமயன கால சஞ்சீவினி மூலிகை தேட உத்தரகாண்ட் அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

உயிர் காக்கும் சஞ்சீவினி மூலிகை தேட உத்தரகாண்ட் அரசு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சீன எல்லையை ஒட்டிய இமயமலைப் பகுதிகளில் துரோணகிரி எனுமிடத்தில் ஆகஸ்ட் முதல் இந்த மூலிகையைத் தேடும் பணி தொடங்க இருப்பதாக அம்மாநில மாற்று மருத்துவத் துறைக்கான அமைச்சர் சுரேந்தர்சிங் நேஹி தெரிவித்துள்ளார். சஞ்சீவினி மூலிகை பற்றி அறியாதவர் எவருமிருக்க வாய்ப்பில்லை. ராமாயணத்தில், ராம ராவண யுத்தத்தில் ராவணனின் அம்பால் கடும்காயமுற்று லட்சுமணன் நினைவிழந்து வீழ்ந்தபின் லட்சுமணன் உள்ளிட்ட ராம சேனையின் பல்லாயிரக்கணக்கானவர்கள் மீண்டெழ அவர்களின் உயிர் காக்கும் பொருட்டு சஞ்சீவினி மூலிகையைத் தேடிக் கொண்டு வரும் பொறுப்பு அனுமனிடம் ஒப்படைக்கப்படுகிறது. அனுமன் தேடிச்சென்றதும் முயற்சியில் வென்று வந்ததும் இதிகாசக் கதை. ராமாயணக் கதை உண்மையாக வாய்ப்பிருக்கிறது என்று நம்பும் உத்தரகண்ட் அமைச்சர் சஞ்சீவினி மூலிகையைத் தேடும் பணிக்கு உத்தரவிட்டிருப்பது இன்றைய பரபரப்புச் செய்தி. சஞ்சீவினி மூலிகை என்ற விஷயம் உண்மையா? சிரஞ்சீவி அனுமன் இப்போதும் இமயமலைக்காடுகளில் உயிருடன் இருக்கிறாரா? மகாபாரத அஸ்வத்தாமா இன்னும் உயிருடன் இருக்கிறாரா? என்பன போன்ற சர்ச்சையான தேடல்களில் ஒன்றாக இந்த மூலிகைத் தேடலும் அமையாமல் உண்மையாக இப்படி ஒரு மூலிகை கிடைத்தால் உயிர் காக்கும் மருத்துவத்துறையில் அது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக நீடிக்கும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.