Show all

2000 ரூபாய்தாளை வெளியிட்டது தவறே என உணர்கிறதா! இந்திய பாஜக அரசு

கருப்புப்பணம் மற்றும் கள்ள ரூபாய் தாள்களை ஒழிக்கும் நடவடிக்கை என்று இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற பாஜக அரசு முன்னெடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை- எதிர்மறை விளைவை ஏற்படுத்தி வரும் நிலையில், 2000 ரூபாய் தாளை கொஞ்சம் கொஞ்சமாக முடக்க நினைப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

20,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அதிக மதிப்புள்ள பணத்தாள்கள், கருப்புப் பணத்திற்கும், கள்ள ரூபாய்தாள் பெருக்கத்திற்கும் காரணம் என்பதை அறிஞர் பெருமக்கள் நீண்ட காலமாக அறிவுறுத்தி வருவது உண்மையே. பிச்சைக்காரன் படத்தில் கூட அதிக மதிப்புள்ள ரூபாய்தாள்களை ஏன் ஒழிக்க வேண்டும் என்பதை தெளிவாகக் கூறியிருப்பார்கள். 

ஆனால் பாஜக அரசு 500, 1000 ரூபாய்தாளை ஒழித்து விட்டு 2000 ரூபாய் தாளை வெளியிட்டு கருப்பு பணமும், கள்ள ரூபாய் தாள்களும் பெருகி இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவதால் செய்வதறியாது கையைப் பிசைந்து நிற்கிறது.

கருப்புப்பணம் மற்றும் கள்ள ரூபாய் தாள்களை ஒழிக்கும் நடவடிக்கை என்று இந்தியாவை ஆளும் வாய்ப்பு கிடைக்கப் பெற்ற பாஜக அரசு முன்னெடுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, 500, 1000 ரூபாய் தாளுக்கு மாற்றாக 2000 ரூபாய்தாளை வெளியிட்டதால், எதிர்மறை விளைவை ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறன நிலையில், 2000 ரூபாய் தாளை கொஞ்சம் கொஞ்சமாக முடக்க நினைப்பதாகத் தகவல் வெளியாகி வருகிறது.

இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 ரூபாய் தாள்களை பணம் வழங்கும் இயந்திரங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்திய மாநில வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 தாள்களை செல்லாது என அறிவித்ததை கொஞ்சம் போல ஏற்றுக் கொண்ட நபர்களும், மற்ற பலரும் புதிய ரூ.2000 தாள் வெளியிட்டின் மீது தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு பணமதிப்பிழப்பு பெருங்காரணம் என்று குற்றஞ்சாட்டி வருவதை பாஜக அரசு கொஞ்சமாக புரிந்து கொண்ட நிலையில், அதற்கு மாற்றுத் தீர்வாக, அதிக மதிப்புடைய ரூபாய் தாள்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, குறைவான மதிப்புடைய ரூபாய் தாள்களின் புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,298.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.