Show all

இந்தியாவிற்கு எரிவாயு கொண்டு வருவதற்கு 1814 கிலோ மீட்டர் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள்

இந்தியாவிற்கு எரிவாயு கொண்டு வருவதற்கு 1814 கிலோ மீட்டர் நீளத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் நேற்று துர்க்மெனிஸ்தானில் தொடங்கப்பட்டன.

துர்க்மெனிஸ்தானின் மேரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி, துர்க்மெனிஸ்தான் அதிபர் குர்பங்குலி ஆகியோர் கலந்துகொண்டு எரிவாயு குழாய் பதிப்பதற்கான பள்ளம் தோண்டும் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஆகிய நாடுகளைக் கடந்து இந்தியாவரை 1814 கிலோ மீட்டர் தூரத்திற்கு எரிவாயு குழாய் பதிக்கப்படும் இந்த திட்டத்திற்கு சுமார் 66,000 கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, இந்தத் திட்டத்தின் வெற்றி வன்முறை போன்ற எதிர்மறை சக்திகளால் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை எடுத்துரைக்கும் என்றார்.

வரும் 2019ம் ஆண்டு நிறைவடையும் இந்தத் திட்டம் இந்தியாவின் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிசக்தி தேவையை நிறைவு செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும். இதே போல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளும் பயன் அடையும்.  


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.