Show all

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விமான நிறுவனங்கள், 200 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளன

சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட 8 தனியார் கார்ப்பரேட் விமான நிறுவனங்கள், 200 கோடி ரூபாய் இழப்பீடுகளுக்கான விண்ணப்பங்களை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளன.

கல்யாண் ஜூவல்லர்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், சன் டிவி, கருடா, ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஜாய் ஜெட் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள் வெள்ளத்தால்   பாதிக்கப்பட்டன.

கடந்த ஒரு மாதமாகவெள்ளத்தால்   பாதிக்கப்பட்ட புதுச்சேரி, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து 3,000 கோடி ரூபாய் இழப்பீடுக்கான கோரிக்கைகளை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் பெற்றுக் கொண்டுள்ளன.

எங்களுக்கு சொந்தமான ஒரு விமானம் பிரேசிலில் தயாரிக் கப்பட்டது. வெள்ளத்தால்   அது பழுதடைந்து விட்டது. இழப்புகளை மதிப்பிட்டு கொண்டிருக்கிறோம் என்று ஜாய் ஜெட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட விமான போக்குவரத்து துறையிடமிருந்து எந்தவொரு இழப்பீடுக்கான கோரிக்கைகளை நாங்கள் பெறவில்லை. எனக்கு தெரிந்த வரையில் 8 நிறுவனங்களின் விமானங்கள் பகுதியளவு பாதிப்படைந்துள்ளன. முதல் கட்ட தகவல்களின் படி 200 கோடி ரூபாய் இழப்பீடு கோரலாம் என்று நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால்   பாதிக்கப்பட்ட ஐந்து விமான நிறுவனங்களிடமிருந்து 80 கோடி ரூபாய் இழப்பீடுக்கான கோரிக்கையைப் பெற்றுக் கொண்டோம். இந்த விமானங்கள் கல்யாண் ஜூவல்லர்ஸ், டிவிஎஸ், கருடா ஆகியவற்றிக்குச் சொந்தமானவை.

இது தவிர ஜெட் ஏர்வேஸ்க்கு சொந்தமான இரண்டு விமா னங்கள் பகுதியளவு பாதிப்படைந்துள்ளன. இந்த விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் விமானத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது என்று ஓரியண்டல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் அஜித் குமார் கூறியுள்ளார்.

டிவிஎஸ் குழுமத்தின் 2 விமானங்கள் மற்றும் சன் டிவியின் ஒரு விமானம் ஆகியவை பழுதடைந்துள்ளதால் இழப்பீடு கோரியுள்ளன என்று யுனைடெட் இந்திய இன்ஷுரன்ஸ் நிறுவ னத்தின் பொதுமேலாளர் டி.எல். அலமேலு தெரிவித்தார். இது குறித்து ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஒரு மாதத்தில் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் அவர் கூறினார்.

விமானங்களுக்கு காப்பீடு என்பது விமானங்களுக்கு ஏற்பட்ட சேதத்துக்கு மட்டுமே கிடைக்கும். விமானங்களை இயக்காததால் ஏற்பட்ட வருமான இழப்புக்கு காப்பீடு கிடையாது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.