Show all

100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும்.

பருவநிலை மாற்றம் காரணமாக, அடுத்த 100 ஆண்டுகளில் பூமியின் கடல் மட்டத்தின் அளவு மூன்று அடி உயரும் என்று நாசா ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில்... கடந்த 2013ம் ஆண்டு பருவநிலை மாற்றத்துக்கான ஐக்கிய நாடு அரசுகளின் குழு கடல் மட்டம் உயர்வு பற்றி ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தின் அளவு ஒரு அடியில் இருந்து மூன்று அடியாக உயரலாம் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் அது எவ்வளவு விரைவாக நடைபெறும் என்பதை உறுதி செய்ய முடியாது. கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகாக பகுதியில்,பனிப்பாறைகள் உருகியதால் கடந்த 1992 ஆம் ஆண்டு கடல்மட்ட அளவு, 3 அங்குலமாக உயர்ந்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

மேலும் உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரையிலான கடல் மட்ட உயர்வு அளவுகளைப் பார்க்கும்போது, இப்போதிருக்கும் வேகத்திலேயே பனிப் பாறைகள் உருகினால், நிச்சயமாக இன்னும் 100 அல்லது 200 ஆண்டுகளில் உலகளாவிய கடல் மட்டத்தின் அளவு 10 அடி உயரும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.