Show all

தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மீது நடைபெற்று வரும் வழக்கு.

சட்டப்பேரவைக் காவலரை தாக்கியதாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் மீது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

துமிழகச் சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற்ற போது தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களை, அவை காவலர்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றினர், அப்போது சிறப்பு துணை ஆய்வாளர் விஜயனை தாக்கியதாக தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் மற்றும் சேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, சட்டமன்ற உறுப்பினர் தினகரன் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன், தினகரன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்தார். இதுதொடர்பாக கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.