Show all

ஒடிஸா நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்

ஒடிஸா நக்ஸலைட் தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 26.8.2015 அன்று ஒடிஸா மாநிலம், மல்கான்கிரி மாவட்டம், சிந்தாதுளி கிராமத்தில் நக்சல் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக ஈடுபட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், திம்மநத்தம் கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமைக் காவலர் ஆ. ரவிச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டம், அருமனை கிராமத்தைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை காவலர் அபிலாஷ் ஆகிய இருவரும் நக்சலைட்டுகளின் திட்டமிட்ட வெடிகுண்டு தாக்குதலில் மரணம் அடைந்தார்கள் என்ற செய்தியை அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தார்.

நக்சலைட்டுகள் தாக்குதலில் வீர மரணம் எய்திய எல்லைப் பாதுகாப்பு படை தலைமைக் காவலர் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் காவலர் அபிலாஷ் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நக்சலைட்டுகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.