Show all

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து பதற்றம்

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதோடு சேர்த்து கடந்த 6 நாட்களில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.

போதிய மருத்துவ வசதி, சுகாதாரம் போன்ற குறைபாடுகளால்தான் குழந்தைகள் இறந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனினும், குழந்தைகளின் உடல்நலன் மட்டுமே உயிரிழப்புக்குக் காரணம் என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.