Show all

குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் போராட்டம்

குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாயினர். அமைதி காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஆனந்தி பென் படேல் உள்ளார். இம்மாநிலத்தில் பெருமளவு படேல் சமூகத்தினர் உள்ளனர். இவர்கள் தங்கள் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கோரியும், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கோரியும், ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேல் தலைமையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத், சூரத் , ராஜ்கோட் ஆகிய பகுதிகளில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில் சில இடங்களில் வாகனங்களுக்கு தீவைப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள். சூரத் நகரில்நடந்த வன்முறையில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டது. சம்பவம் அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது எனவும் கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.