Show all

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொது மக்கள் பார்வைக்காக பேசும் கிளிகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொது மக்கள் பார்வைக்காக பல அரிய வகை பறவைகள் உள்ளன. நேற்று லக்னோ உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் முறையில் ஒரு ஜோடி தங்க நிற கோழியும், நீல மஞ்சள் நிற மக்கா கிளியும் வழங்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து லக்னோ உரியல் பூங்காவிற்கு ஆண் நெருப்பு கோழி ஒன்றும் பதிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பொது மக்கள் பார்வைக்கு லக்னோவில் இருந்து வழங்கப்பட்ட ஒரு ஜோடி தங்க நிற கோழியும், நீல மஞ்சள் மக்கா கிளியும் விடப்பட்டுள்ளது.

இந்த மக்கா கிளி நாம் எதை பேசினாலும் திருப்பி பேசும் ஆற்றல் உள்ளதாக செய்தி தொடர்பு அலுவலர் சுதாகர் தெரிவித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.