Show all

சச்சின் தெண்டுல்கர் ஏ.ஆர்.ரகுமானைச் சந்தித்தார்

சென்னையில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் சென்னை வந்தார். அவர் கோடம்பாக்கத்தில் உள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்தார். ஏ.ஆர்.ரகுமான் அவரை வரவேற்றார். அப்போது ஏ.ஆர்.ரகுமானின் தாயாரும் வீட்டில் இருந்தார்.

தெண்டுல்கரும், ஏ.ஆர்.ரகுமானும் நீண்ட நேரம் பேசினார்கள். ஏ.ஆர்.ரகுமானிடம் தெண்டுல்கர் எப்படி இசையமைக்கிறீர்கள் என்பதை நான் பார்க்க ஆவலாக உள்ளேன் என்றார். உடனே ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது எப்படி என்று அவருக்கு சொல்லிக் கொடுத்தார். டியூன் போடுவது எப்படி என்று சில பிரத்தியேக டியூன்களையும் அவர் போட்டுக் காண்பித்தார். இதை தெண்டுல்கர் ரசித்தார்.

இந்த சந்திப்பு முடிந்ததும் தெண்டுல்கர் கூறுகையில், ’நான் ஏ.ஆர்.ரகுமானின் தீவிர ரசிகர். மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தேன்’ என்றார்.பின்னர் தெண்டுல்கர் சென்னையில் கிரிக்கெட் பயிற்சி மைதானத்துக்கு சென்று அங்கு விளையாடிக் கொண்டிருந்த வீரர்களை சந்தித்தார். அவர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களையும் சொல்லிக் கொடுத்தார்.

பின்னர் சச்சின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்;, 27 ஆண்டுகளாக வேகப்பந்து பயிற்சி அளிப்பதற்கு சரியான திட்டமிடல், தொலைநோக்கு பார்வை மட்டுமல்லாமல் முழு ஈடுபாடும் அவசியம். அதுதவிர சரியான நபர்களைக் கண்டறிந்து பயிற்சியளிப்பதும் முக்கியம். அந்த வகையில் டென்னிஸ் லில்லியை நிர்வாகம் கண்டறிந்தது. தற்போது கிளென் மெக்ராத் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இதுவரை நான் விளையாடிய அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் ஏதாவது ஒரு வகையில் எம்.ஆர்.எப். பயிற்சி மையத்துடன் தொடர்புடையவர்கள் ஆவார்கள் என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.