Show all

அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும்

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அலகாபாத் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், அரசு ஊழியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க உத்தரவிட வேண்டும், என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி சுதிர் அகர்வால் தலைமையில் விசாரனைக்கு வந்தது. பின்பு இதுதொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் அரசு ஊழியர்கள் சேர்த்தால், அவர்கள் தனியார் பள்ளிகளில் செலுத்தும் அதே அளவு பணத்தை அரசுக் கருவூலத்துக்கும் செலுத்துமாறு உத்தரவிடலாம்.

அத்துடன், அவர்களுக்கு வழங்கப்படும் மற்ற சலுகைகளையும் ரத்து செய்யலாம். மேலும் அரசுப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை அவர்கள் சேர்க்கும் பட்சத்தில், அந்தப் பள்ளிகள் நன்றாக இயங்குவதை உறுதிப்படுத்த முடியும்.

எனவே, இதுதொடர்பான நடவடிக்கைகளை அரசு அடுத்த 6 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும என்று மாநில தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.