Show all

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

இலங்கை நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒரு சில வன்முறைகளுடன் நடைபெற்ற தேர்தலில் சுமார் 70சத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. மாலை 4 மணிக்கு தேர்தல் முடிவடைந்ததும் உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று மாலை 5.15 மணியளவில் முடிவடைந்தது. அதன்பின் கட்சிகள் பிடித்த தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மொத்தம் உள்ள 196 தொகுதிகளில் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணி 93 இடங்களையும், அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி கூட்டணி 83 இடங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 10 இடங்களையும், ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) 4 இடங்களையும் கைப்பற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பதற்கு 113 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், ரணில் விக்ரமசிங்கே கட்சியின் கூட்டணிக்கு 93 இடங்களே உள்ளன. இருப்பினும், சிறிசேனாவின் ஆதரவால் இன்று மாலை அவர் பிரதமராக பதவி ஏற்பார் என்று தெரிகிறது. அதன்பின்னர், வாக்குகள் அடிப்படையிலான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அமைச்சர்கள் நியமனம் தொடர்பான நடவடிக்கை தொடங்கும்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.