Show all

என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்

என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நிலக்கரித் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காணுமாறும் பிரதமருக்கு ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜுலை 20-ம் தேதி முதல் என்.எல்.சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்திகரமான ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை ஆகும். தற்போது அவர்கள் மறியல் போராட்டத்தையும் துவக்கி உள்ளனர். என்.எல்.சி அதிகாரிகள், ஒப்பந்த தொழிலாளர்கள் தடுக்கப்பட்டால் சுரங்கப் பணி பாதிக்கும். சுரங்கப்பணி முழுமையாக பாதிக்கப்பட்டால் 2990 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்படும். மேலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய 1450 மெகா வாட் மின்சாரமும் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.