Show all

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.35 கோடி டாலர் சரிந்து 35,334 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 8.76 கோடி டாலர் சரிந்து 35,346 கோடி டாலராக இருந்தது. தங்கம் கையிருப்பில் எந்த மாற்றமும் இன்றி 825 கோடி டாலராக நீடிக்கிறது.

சர்வதேச நிதியத்தில் உள்ள கையிருப்பும் 2.59 கோடி டாலர் சரிந்து 128 கோடி டாலராக உள்ளது என ரிசர்வ் வங்கி புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஜூன் 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 35,546 கோடி டாலராக உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.