Show all

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெ

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த 49 பேர் மற்றும் விமானிகள், பணிப்பெண்கள் உள்ளிட்ட 54 பேரில் யாரும் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், அந்த விமானத்தில் ஏழை மக்களுக்கு வழங்குவதற்காக 650 கோடி ருபையாவை (இந்திய மதிப்புக்கு சுமார் 3 கோடி ரூபாய்) தபால் துறை அதிகாரிகள் அனுப்பி வைத்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

மலை மீது மோதிய அந்த விமானம் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்து நொறுங்கியதை சிலர் கண்டதாக கூறும் நிலையில் மேற்படி தொகையும் தீயில் எரிந்துப்போய் இருக்கலாம் எனவும், இரும்பு பெட்டகத்தில் வைத்து அனுப்பப்பட்டதால் எரிந்திருக்க வாய்ப்பில்லை. பணம் பத்திரமாக இருக்கலாம் என்றும் ஊடகங்கள் மாறி, மாறி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.