Show all

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டம். அபுதாபியில் இந்திய சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 69வது இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. அமீரகத்திற்கான இந்தியத் தூதர் டி.பி.சீதாராம் மூவர்ண கொடியேற்றி வைத்தார். பின்னர் அரங்கில் நடைபெற்ற நிகழச்சியில் டி.பி.சீதாராம் உரையாற்றினார். பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அமீரகத் தொழில் அதிபர்கள் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியர்கள் கலந்து கொண்டனர். துபாயில் இந்திய துணை தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு இந்திய சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.