Show all

பாஜக அரசின் ஓராண்டு கால நடவடிக்கைகளைப் பார்த்து, காங்கிரஸ் கலக்கமா?

பாஜக அரசின் ஓராண்டு கால நடவடிக்கைகளைப் பார்த்து, காங்கிரஸ் கலக்கமடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியுள்ளதாவது, பாஜக பொறுப்பேற்ற ஒராண்டில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 60 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை மோடி அரசு செய்வதை ஏற்கமுடியாமல் மனம் வெதும்புகின்றனர். மோடி தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பல்வேறு முயற்சிகள், நடவடிக்கை காரணமாக இந்தியா எழுந்து வந்து கொண்டிருக்கிறது.

வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. பொருளாதார ரீதியில் என்ன என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை செய்து வருகிறோம். புது சட்டங்கள் நிறைவேற்றி வருகிறோம். பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறப்பான முறையில் செயல்பட்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு வழி செய்தோம்.

வீடு, வீடாக சென்று வங்கிக் கணக்கை துவக்கி கொடுத்தோம். பல கோடி பேர் வங்கிக் கணக்கை பெற்றனர். இது போல் பலருக்கும் காப்பீடு துவக்கி கொடுத்தோம். மாதம் 12 ரூபாயில் ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் உருவாக்கி கொடுத்தோம். பென்சன் திட்டம் துவக்கி கொடுத்தோம். அனைத்து தரப்பினருக்கும் பென்ஷன் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது.

ஏமனில் தவித்த இந்தியர்கள் திரும்பி வரவழைக்கப்பட்டனர். வெளிநாட்டு முதலீடு கவரப்பட்டது. திட்டக் கமிஷன் மாற்றி அமைக்கப்பட்டது. மாநில அரசுகளிடம் ஆலோசனை பெறப்பட்டது. ஒரு ஆண்டில் இந்தியாவை நல்லபடியாக நடத்தி காட்டினார் பிரதமர் மோடி. இது போன்று செயல்பாடுகள், காங்கிரசுக்கு கலக்கத்தை உருவாக்கி விட்டது.

60 வருடமாக ஆட்சி நடத்திய நாமே இது போன்றே செய்யவில்லையே என்று காங்கிரசார் பீதி அடைந்தனர். காங்கிரசுக்கு அச்சம் வந்துள்ளது என்று கூறினார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.