Show all

அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற நடுவண் அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தி

நாடு முழுவதும் மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை நடுவண் அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் உதவிகள் பெற ஆதார் அட்டை அவசியம் என்ற நடுவண் அரசின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ. போப்டே, சி.நாகப்பன் ஆதார் அட்டை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பினர். அதன் பிறகு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டனர்.

உச்ச நீதிமன்றம்,அரசின் நல திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், ஆதார் எண் கட்டாயம் அல்ல என்ற தகவலை மக்களுக்கு ஊடகங்கள் மூலம் தெரியப்படுத்தவேண்டும். பொது விநியோகம், சிலிண்டர் வழங்குவதற்கு ஆதார் எண்ணை அரசு கேட்கலாம். ஆதாருக்காக பெறும் தகவல்களை பிற அமைப்புகளிடம் விவரங்களை பகிர கூடாது” என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.