Show all

முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது, அரசியல் நாகரிகம் குறித்ததே

முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது, அரசியல் நாகரிகம் குறித்ததே என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

முதல்வர் ஜெயலலிதாவை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது, அரசியல் நாகரிகம் குறித்ததே என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார் இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், தமிழகத்துக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அக்கறையோடு வந்த பிரதமரை எதிர்க்கட்சியினர் கொச்சைப்படுத்திப் பேசுவது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன், பிரதமரின் பயணம் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கான பயணம் எனவும், பாஜக- அதிமுக ரகசியத் தொடர்பு வைத்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அது நாகரிகமற்ற பேச்சாகும்.

எதிர்க்கட்சியாக இருந்தாலும் கட்சி எல்லை கடந்து, கொள்கை கடந்து ஒரு ஆரோக்கியமான நட்பு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் நாகரிகத்தின் குறியீடாக இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இந்த அரசியல் நாகரிகத்தை, நாகரிகமற்ற முறையில் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே இருக்கும் சுமுகமான உறவு மக்களுக்கு நல்ல பலனைத் தரும் என்ற அடிப்படையிலேயே முதல்வர்- பிரதமரின் சந்திப்பு நடந்தது. தனது உடல் நிலையையும் கருத்தில் கொள்ளாது பிரதமரை முதல்வர் வரவேற்றது, பிரதமராக இருந்தாலும் முதல்வரைச் சந்தித்தது என்று இரு தலைவர்களும் ஓர் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடித்துள்ளனர் என்று தனது அறிக்கையில் தமிழிசை தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.