Show all

தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கப்பட்டு உள்ளது

தங்கத்தின் இறக்குமதி நடப்பு நிதியாண்டின் காலாண்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில் அதன் இறக்குமதி அதிகரித்து உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் இருந்ததைவிட நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் இறக்குமதி 67 சதவிகிதமாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த வருடத்துக்குள் மேலும் 1000 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படும் என்றும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை 155 டன் தங்கம் இறக்குமதி ஆகி உள்ளது என்றும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில், இந்த அதிகப்படியான தங்கம் இறக்குமதியால் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்கிற எத்ர்ப்பார்ப்பு நுகர்வோர் இடையே எழுந்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.