Show all

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில நாட்கள் மாத்திரமே

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது சில நாட்கள் மாத்திரமே. தென்னிலங்கையில் பற்றிக் கொண்டுள்ள தேர்தல் பரபரப்புக்கு இணையாக, வடக்கு- கிழக்கு தேர்தல் களமும் பரபரப்புக்களினால் நிறைந்திருக்கின்றது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட கடந்த ஆறு ஆண்டுகளில் வடக்கு- கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே போட்டி நிலையோடு எதிர்கொள்ளப்படும் முதலாவது தேர்தலாக இதனைக் கொள்ள முடியும்.

2010ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கும் தமிழ் மக்கள் தயாராக இருக்கவில்லை. 2009 இறுதி மோதல் கோரங்களினால் மனோரீதியாக மிகவும் பலவீனமான நிலையில் இருந்தார்கள். அதுபோல, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே போட்டியிட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவும் போட்டியிடுவது, இந்தப் பொதுத் தேர்தலை போட்டி நிறைந்ததாக மாற்றியிருக்கின்றது.

பொதுத் தேர்தலை இலக்கு வைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. அதில், தமிழ் மக்களின் அரசியலுரிமைப் போராட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி, தமிழ் மக்களுக்கான தீர்வு எவ்வாறு அமைய வேண்டும் என்கிற எதிர்பார்ப்புக்களையும் முன்வைத்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.