Show all

நேரு மற்றும் அவரது குடும்ப வழியினர் பற்றிய தகவல்களை மர்ம நபர் ஒருவர் திருத்தியுள்ளதாக புகார்

உலகின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை கொண்டிருக்கும் இணையதள தகவல் களஞ்சியம் விக்கிபீடியா. இதில் இந்தியாவின் முதல் பிரதமரும், இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஜவகர்லால் நேரு மற்றும் அவரது வம்சத்தினர் பற்றிய தகவல்களை மர்ம நபர் ஒருவர் திருத்தியுள்ளதாக புகார் எழுந்தது.

கடந்த ஜூன் 26-ந் தேதி இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஜவகர்லால் நேருவின் தாத்தா கங்காதர் நேரு ஒரு முஸ்லிம் என்று திருத்தப்பட்டு இருந்தது. அவர் கியாசுதீன் காஜி என்ற பெயரில் பிறந்ததாகவும், பின்னர் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து தப்பிக்க கங்காதர் நேரு என்ற இந்து பெயராக மாற்றிக்கொண்டதாகவும் கூறப்பட்டு இருந்தது.

அதேபோல இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் தொடர்பான விவகாரங்கள் இதில் சேர்க்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்பட்டது. பின்னர் இந்த திருத்தங்களை விக்கிபீடியாவின் ஆசிரியர்கள் நீக்கிவிட்டதாக அந்த நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், மக்களவையில் இந்த சம்பவம் தொடர்பாக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்ற கேள்விக்கு இன்று, எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தொலை தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அதை திருத்தியது யார் என்பது குறித்து விசாரிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விக்கிபீடியா தளத்தில் குறிப்பிட்ட நபர்கள்(பணியாளர்கள்) மட்டுமின்றி, அந்நிறுவனத்துடன் நேரடி தொடர்பில் இல்லாதவர்கள் கூட தகவல்களை மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.