Show all

பச்சை நிறமாக மாறியது மெக்சிகோ கடற்கரை

மெக்சிகோ கடல்பகுதியில் அடித்து வரப்பட்ட கடல் பாசியால், கடற்கரைப்பகுதி முழுவதும் கரும்பச்சை நிறமாக மாறியது. பாசியை அகற்றும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது. எப்போதும் பொன்னிறத்தில் ஜொலித்திடும் கேன்கன் நகர கடல் பகுதியில் பளிங்குபோல் காட்சியளிக்கும் கடல்நீரில் ஆனந்தமாக நீராட சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக டன் கணக்கில், கடல் பாசி கரை ஒதுங்கியுள்ளது.

கடலோரத்தில் சுமார் 200 கிலோமீட்டர் தொலைவுக்கு நீண்டு கிடக்கும் கடல் பாசியை அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மிகப்பெரிய இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தப்படும் கடல் பாசி, கடற்கரையில் குழி தோண்டி அப்புறப்படுத்தப்படுகிறது. கடற்கரையின் நிறம் மாறியதோடு, ஒருவித துர்நாற்றம் வீசுவதால், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்பாசிகள் இவ்வாறு கரை ஒதுங்க காரணம் தெரியாத நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே இந்த நிகழ்வு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.