Show all

ஒரு தீவிரவதியையாவது உயிருடன் பிடிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்

ஒரு தீவிரவதியையாவது உயிருடன் பிடிக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று, மத்திய உள்துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுவிட்டதால், அங்கு தாக்குதல் நடத்தியத் தீவிரவாதிகள் யார் என்பது தெரியாமல் போய்விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சகம் கருத்துத் தெரிவித்துள்ளது.

அப்படி ஒருவரைக் கூட உயிருடன் பிடிக்க முடியவில்லை என்பதால், தீவிரவாதிகள் குறித்த ஓராயிரம் கேள்விகளுக்கு விடை தெரியாமலே இருக்கிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எனவே, தாக்குதல் நடத்தும்போது ஒரு தீவிரவாதியையாவது உயிருடன் பிடிக்க வேண்டும் என்றும், அப்போதுதான் தீவிரவாதிகள் எங்கிருந்து வந்திருகிறார்கள், இவர்களுக்கு ஆதரவு அளிப்பது யார், இவர்களின் பராமரிப்பை யார் பார்த்துக் கொள்கிறார்கள், தீவிரவாதிகளைப் பராமரிப்பதில் பாகிஸ்தானின் பங்கு என்ன என்பதுக் குறித்தெல்லாம் அறிந்துக் கொள்ள முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சகம தெரிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.