Show all

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்ஸ்மிரிதி இரானிக்கு எதிராக அவரை பாதிக்கும் வகையில் கருத்துக

மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இரானிக்கு எதிராக அவரை பாதிக்கும் வகையில் கருத்துகளை தெரிவித்ததற்கு ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்கும்படி தேசிய பெண்கள் ஆணையம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான குருதாஸ் காமத்தை கேட்டு கொண்டுள்ளது.

ராஜஸ்தானில் கடந்த வியாழக்கிழமை பேசிய காமத், கல்வி துறை பொறுப்பை ஏற்கும் மந்திரி ஒருவரின் கல்வி தகுதி குறித்து கேள்வி எழுப்பியதுடன், இரானியை சுத்தப்படுத்தும் பெண் என குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவரான லலிதா குமாரமங்கலம், ஸ்மிரிதி இரானி குறித்து குருதாஸ் காமத் கூறிய கருத்திற்கு விளக்கம் கேட்டு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளார்.

ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய காமத், நான் மும்பையில் இருந்து வருகிறேன். ஓட்டல் ஒன்றில் அவர் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு இருந்ததை பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.

அவரது குடும்பத்தின் நிதிநிலை நல்ல முறையில் இல்லை. அதனால் வெர்சோவாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் இரானி பணிபுரிந்துள்ளார். 10வது வகுப்பு வரையே தேர்ச்சி பெற்றுள்ள இரானி, ஓட்டலில் மேசைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். கல்வி கற்காத சகோதரி ஒருவர் இந்நாட்டின் கல்வி மந்திரி என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார் என்ற கருத்து எல்லா இடத்திலும் பரவி உள்ளது என காமத் கூறியுள்ளார்.

காமத்தின் இந்த கருத்திற்கு ராஜஸ்தானில் உள்ள பாரதீய ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற கீழ்த்தர அறிக்கைகள் காங்கிரசின் நம்பிக்கையற்ற நிலையை பிரதிபலிக்கிறது என கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.