Show all

ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணைய வசதி செய்து தருவது தொடர்பான முகநூலின் ஆராய்ச்சி

ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணைய வசதி செய்து தருவது தொடர்பான முகநூலின் ஆராய்ச்சி நிறைவடைந்துள்ளது. விரைவில் பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரதானமானது ‘பேஸ்புக் என்கிற முகநூல். உலகம் முழுவதும் கால்பதித்துள்ள இந்த நிறுவனத்தின் சேவைகள் சில நாடுகளில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கு மட்டும் சென்று சேரவில்லை.

இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக கடந்த மார்ச் மாதம் ‘டிரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் இணையதளம் வசதி செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விண்வெளியில் லேசர் கதிர்கள் மூலம் இணையதள சேவை கிடைக்காத பகுதிகளில் அவ்வசதியை ஏற்படுத்துவதற்காக சூரியஒளி மூலம் இயங்கும் ஆளில்லா சிறிய ரக விமானங்களை பயன்படுத்தும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக முகநூல் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில் சுமார் நான்கு மாதங்களுக்கு பிறகு இணைதள வசதியை ஏற்படுத்தும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த சிறிய விமானங்கள் விண்வெளியில் செலுத்தப்பட்டு பரிசோதனை நடத்தப்படும் என்று முகநூல் அறிவித்துள்ளது.

இது குறித்து முகநூல் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் துணை தலைவர் ஜே பாரிக் கூறுகையில், புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி அதன் மூலம் இணையதளம் சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எங்களது நோக்கம்" என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.