Show all

முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார்

முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார் நிலையில் உள்ளது என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற்படைப் பிரிவின் பாதுகாப்பு வேண்டும் என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது.இதற்குப் பதில் அளித்த மத்திய அரசு முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள அரசின் போலீசார் பாதுகாப்புக்கு உள்ளனர் என்றும், கேரள அரசு கேட்டுக்கொண்டால் இதுக்குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

இதையடுத்து இதுக்குறித்து விளக்கம் அளிக்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இன்று கேரள அரசு சார்பாக அளிக்கப்பட்ட விளக்கத்தில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு 124 காவலர்கள் அடங்கிய காவலர் படை தயார் நிலையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இதுக்குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள அவகாசம் அளித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.