Show all

டெல்லியில் நடைபெற்ற NLC முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

ஊதிய உயர்வு குறித்து என்.எல்.சி தொழிலாளர்களுடன் டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகத்துடன் நிரந்தர தொழிலாளர்கள் சென்னையில் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை.

இந்நிலையில், டெல்லியில், மத்திய தொழிலாளர் நல ஆணையர் மிஸ்ரா முன்னிலையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 10 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க தொழிலாளர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக, தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.