Show all

நாய்க்குட்டியின் கலக்கல்

பார்த்தவுடன் இது கரடிக் குட்டியா அல்லது நாய்க் குட்டியா என்று குழப்பத்தை ஏற்படுத்தும் நாய்க் குட்டி ஒன்று சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 1.36 லட்சம் பாலோவர்களுடன் கலக்கிவருகிறது.

ஷார் பைய் இனத்தை சேர்ந்த 8 வாரங்கள் மட்டுமே ஆன இந்த நாய்க்குட்டியை இன்ஸ்டாகிராமில் பார்ப்பவர்களால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடிவதில்லை. டோன்கி என்ற பெயருடன் இன்ஸ்டாகிராமில் இருக்கிறது இந்த நாய்க் குட்டி. ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு போட்டோவை பகிரும்போதும் குறைந்தது 15 ஆயிரம் பேர் லைக் செய்கிறார்கள்.

இந்த லிங்கிற்கு (https://instagram.com/bearcoat_tonkey/) சென்றால் நீங்களும் டோங்கியை பாலோ செய்யலாம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.