Show all

பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட பேய் மழை

பாகிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த அடைமழைக்கு 51 பேர் பலியானதாகவும் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி தொடங்கி அந்நாட்டின் பல பகுதிகளை பதம்பார்த்த தொடர் மழையினால் 2 லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த உணவுப் பயிர்கள் நாசமடைந்துள்ளன. 451 கிராமங்கள் பிறபகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டாயிரம் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள சிட்ரால் மாவட்டத்தில் மட்டும் 350 வீடுகள் சேதமடைந்துள்ளன. இங்கு மட்டும் மழைசார்ந்த விபத்துகளில் 26 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த மாவட்டத்தை பிறபகுதிகளுடன் இணைக்கும் 40 பாலங்கள் நாசமடைந்துள்ளன. 11 பாசன கால்வாய்கள் வெள்ளநீரால் அரித்துச் செல்லப்பட்டன.கிழக்கு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 356 கிராமங்கள் பாதிப்படைந்துள்ளன. 2 லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த உணவுப் பயிர்கள் நாசமடைந்துள்ளன. சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வீடு, வாசல்களை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர் என பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.