Show all

மழையையும் பாரது ராகுல் காந்தி சொற்பொழிவு

திருச்சியில் நேற்று நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்திக்கு தொண்டர்கள் உற்சாக வறவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள ஜீ கார்னர் திடலில் கொட்டும் மழையில் அவர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், கல்வியின் பெருமையை உணர்ந்த காமராஜர், நாள் ஒன்றுக்கு 4 பள்ளிக்கூடங்கள் வீதம் திறந்ததாக குறிப்பிட்ட அவர், பள்ளிகள் திறந்தும் மாணவர்கள் வராததால் மதிய உணவுத்திட்டத்தை கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் உரையாற்றிய அவர், தமிழகத்தில், வேலையில்லா திண்டாட்டம் தான் பெரிய பிரச்சனையாக உள்ளதாக கூறினார். தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு இளைஞர்கள் வேலையின்றி இருப்பதை சுட்டிக்காட்டிய ராகுல், இளைஞர்களின் குரலுக்கு ஆட்சியாளர்கள் செவிசாய்க்கவில்லை என்று குறை கூறினார். தமிழக அரசின் மதுக்கொள்கையால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்துள்ளதாக புகார் கூறிய அவர், மதுவிற்பனையல் அரசுக்கு கடந்த ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக குற்றம்சாட்டினார். பொதுக்கூட்ட மேடை மற்றும் ராகுல் விவசாயிகளை சந்திக்கும் இடம் ஆகியவை, மத்திய சிறப்பு பாதுகாப்பு படை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது, இங்கு, 4 அடுக்கு பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட தமிழகப் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல பத்திரிக்கையாளர்கள் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அனுமதிக்கப்படாததால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.