Show all

திட்டும் பாராட்டும்

நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பதாக சோனியா காந்தியிடம் திட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட சசி தரூர்.

நரேந்திர மோடியின் பாராட்டு பெற்றார்; ஆக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டியில் காலனியாதிக்கம் பற்றிய புள்ளி விவரத்துடன் கூடிய நையாண்டிப்பேச்சு இணையதளங்களில் லட்சக்கணக்கான இந்தியர்களைக் கவர்ந்துள்ள நிலையில், அவரது வாதத் திறமைக்காக சசிதரூர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, "சசி தரூரின் பேச்சு தற்போது யூடியூபில் வைரலாகியுள்ளது. நாட்டுப்பற்றுடைய இந்தியர்களின் உணர்வுகளுடன் சசிதரூரின் பேச்சு இரண்டறக் கலந்துள்ளது. சரியான விஷயங்களை சரியான இடத்தில் திறமையான வாதங்களை முன்வைப்பதன் மூலம் என்ன மாதிரியான எண்ண அலைகள் ஏற்படும் என்பதை சசிதரூரின் பேச்சு எடுத்துக்காட்டியுள்ளது” என்று நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஆராய்ச்சி முயற்சியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் சசிதரூரை பாராட்டினார்.

அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த சசி தரூர், பிரதமர் மோடியின் பாராட்டை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.அண்மையில், பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட சசி தரூர், அவரது யோகா தின செயல்பாடுகளைப் பாரட்டியது குறிப்பிடத்தக்கது.

திட்டும் பாராட்டும்.

நாடாளுமன்றம் சுமூகமாகச் செயல்பட காங்கிரஸ் அனுமதிக்கவேண்டும் என வலியுறுத்தியதைத் தொடர்ந்து கட்சியின் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பதாக சோனியா காந்தியிடம் திட்டு வாங்கிக் கட்டிக்கொண்ட சசி தரூர்.

நரேந்திர மோடியின் பாராட்டு பெற்றார்; ஆக்ஸ்போர்ட் யூனியன் சொசைட்டியில் காலனியாதிக்கம் பற்றிய புள்ளி விவரத்துடன் கூடிய நையாண்டிப்பேச்சு இணையதளங்களில் லட்சக்கணக்கான இந்தியர்களைக் கவர்ந்துள்ள நிலையில், அவரது வாதத் திறமைக்காக சசிதரூர்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, "சசி தரூரின் பேச்சு தற்போது யூடியூபில் வைரலாகியுள்ளது. நாட்டுப்பற்றுடைய இந்தியர்களின் உணர்வுகளுடன் சசிதரூரின் பேச்சு இரண்டறக் கலந்துள்ளது. சரியான விஷயங்களை சரியான இடத்தில் திறமையான வாதங்களை முன்வைப்பதன் மூலம் என்ன மாதிரியான எண்ண அலைகள் ஏற்படும் என்பதை சசிதரூரின் பேச்சு எடுத்துக்காட்டியுள்ளது” என்று நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கான ஆராய்ச்சி முயற்சியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் சசிதரூரை பாராட்டினார். அப்போது முதல் வரிசையில் அமர்ந்திருந்த சசி தரூர், பிரதமர் மோடியின் பாராட்டை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார்.

அண்மையில், பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட சசி தரூர், அவரது யோகா தின செயல்பாடுகளைப் பாரட்டியது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.